4. Oktober 2024

வட்டக்கச்சி பண்பாடு, வீதிகள், குடியிருப்புகள்…

இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர்.

அதன்பின் யுத்த முடிவுக்கு பின்னரான காலப்பதகுதிகளில் குறிப்பாக 2010, 2011 இல் மீண்டும் குடியேறியுள்ளனர். தற்பொழுது இந்து,கிறித்தவம்,இசுலாம் ஆகிய மதங்கள் காணப்படுகின்றன.

குடியிருப்புகள்: இங்கு திட்டமிட்ட குடியிருப்புக்களே காணப்படுகின்றன, இப்பிரதேசத்திலும் இதனைச்சூழவுள்ள பிரதேசத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் காணப்படுவதால் இப்பகுதியில் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர்.

வீதிகள்: இங்கு போக்குவரத்து வீதிகள் அதிகம் காணப்படுகின்றது, எனினும் பெரும்பாலான பகுதி சீர் அற்ற நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிளிெநொச்சியில் இருந்து வரும் பிரதானவீதி வட்டக்கச்சி ஊடாக வந்து வட்டக்கச்சி சந்தையடியில் இரண்டு பிரதானவீதியாக பிரிகின்றது, அதில் ஒன்று தர்மபுரத்திலும், மற்றயது புளியம்பொக்கணை சந்தியிலும் வந்து முல்லைவீதியில் சங்கமிக்கின்றது. மற்றும் கிராமத்தின் உள்ளே பல வீதிகள் காணப்படுகின்றன.

Schreiben Sie einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert