யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 20.03. 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற கட்டட மேற்பார்வையாளர்)-ஜானகி தம்பதிகளின் அருமை மகனும், வைத்திலிங்கம்(சாமியார் கடை)-செல்லம்மா(கட்சன் வீதி வட்டக்கச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(ஆசிரியை இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக்கணவரும்,
ஜெனனி, கஜானி, யாழினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பாலச்சந்திரன், குமாரகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான சிவபாலன்(கனடா), சிவநேசன் மற்றும் சிவராசா, முரளிதரன் ஆகியோரின் அருமை சகோதரரும்,
விக்னேஸ்வரன்(விக்கி, சுவிஸ்), யோகலிங்கம்(யோகன், சுவிஸ்), யோகரத்தினம், இரத்தினேஸ்வரி, ரஞ்சினி(கனடா), தவமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.03.2011 செவ்வாய்கிழமை அன்று வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் நடைபெற்றது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.