யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மணிமேகலை, இந்திராணி(ஓய்வுநிலை முகாமைத்துவ உதவியாளர்), லோகேஸ்வரி(அதிபர் மங்கையர்கரசி வித்தியாலயம்), காலஞ்சென்ற மோகனேஸ்வரி, பஞ்சேந்திரன்(லண்டன்), சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நகுலசிறி(தபாலய ஊழியர்- நெடுந்தீவு), சகுந்தலா(லண்டன்), தர்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பொன்னம்பலம், தனுஸ்கோடி, காலஞ்சென்ற சண்முகநாதன், தியாகராஜா, ஐயாதுரை, தில்லையம்பலம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பையா, சின்னத்துரை, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யதூஷினி, அனுசாந், அஷ்னா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.